jannal-kaatru.blogspot.com
ஜன்னல் காற்று: December 2015
http://jannal-kaatru.blogspot.com/2015_12_01_archive.html
Friday, December 11, 2015. நதியே உன்னை. வீதி தாண்டி வீட்டுக்குள் புகுந்தாய்,. வீட்டை மூழ்கடித்து. வீதியில் நிறுத்தினாய்,. அகதியாவதின் அவலம். இரண்டே நாட்களில் சொல்லிப்போனாய்,. சாவும் ஒரு சம்பவமன. பிணமாக்கி உருட்டி விளையாடினாய்,. மலக்கழிப்பையும். மாதக்கழிப்பையும். கொடூரமாக்கினாய். இதுதான் நீ. இது நீ ஆடிய தடம்,. சிறிது ஆடிப்போயிருக்கிறாய். போனால் போகிறது. எம் வீட்டுப். பச்சைப்பிள்ளைகளை. வண்டிகளின் பின்னால். கையேந்தி ஓடவைத்தாயே,. சண்டாளி. அதைத்தானடி. 0 கருத்துக்கள். Subscribe to: Posts (Atom).
jannal-kaatru.blogspot.com
ஜன்னல் காற்று: August 2013
http://jannal-kaatru.blogspot.com/2013_08_01_archive.html
Sunday, August 25, 2013. அரித்தெடுக்கவியலா. ஆழத்துள் கிடக்கின்றன. பால்யத்தின் திடலில். கழற்றியெறிந்த. அரைக்கால் சட்டையும். வெயில் தின்ற. விளையாட்டுகளும். ஏக்கப் புற்றுள்ளிருந்து. ஊர்ந்தேறும். எறும்புச்சாரையைக். கயிறாக்கி. ஊஞ்சல் ஆடுகிறான். 0 கருத்துக்கள். Subscribe to: Posts (Atom). ஜன்னல் காற்று. சுப. முத்துக்குமார். View my complete profile. தமிழில் எழுத (கருத்துக்களைப் பதிக்க உதவியாய்). ஜன்னல் காற்றில். இரயில் (சக)வாசம். கவிதைக்காற்று. காதல் திசை. வேண்டுதல். இது வரை. உலா வீதி.
jannal-kaatru.blogspot.com
ஜன்னல் காற்று: January 2016
http://jannal-kaatru.blogspot.com/2016_01_01_archive.html
Friday, January 29, 2016. இந்த முகத்தை எங்கோ. பாா்த்தது போலிருக்கிறது. இதே முகம்தான் அங்கும் இருந்தது. குருட்டுப் பாடகியின். அறியாத வெளிகளுள் உலவும் விழிகளுடன்,. தேநீா்க்கடையோரத்தில். காகங்களுக்குக் காராபூந்தியை வீசிவிட்டு. நிலைத்த பாா்வை பாா்த்திருக்கும். தாடிக்காரக் கிழவனிடமும்,. இப்படி இதுதான் முதல்முறையென. உச்சத்தில் கண்ணீருடன். சிாித்துப் புலம்பிய அவளிடம்,. மீச்சிறுகணம் நினைவு திரும்பி. மீண்டும் உன்மத்தச் சிாிப்புடன். அந்தத் தகப்பனிடம்,. இப்படித்தான்,. 0 கருத்துக்கள். Friday, January 22, 2016.
jannal-kaatru.blogspot.com
ஜன்னல் காற்று: October 2013
http://jannal-kaatru.blogspot.com/2013_10_01_archive.html
Tuesday, October 29, 2013. எனக்கான நாற்காலி. காற்று. அமர்ந்திருக்கிறது. என் நாற்காலியில். திண்ணையில். காத்திருக்கிறேன். காற்று விட்டுச் செல்வதற்காக. 0 கருத்துக்கள். Friday, October 25, 2013. அவள் கனா. முன்னிருக்கையில். உறக்கத்திலிருந்தவள். சரத்தினின்றுதிர்ந்த. ஒற்றை மல்லிகை. பரப்பியது. என் மடியில். அவள் கனவை. 0 கருத்துக்கள். ஈசல் வார்த்தைகள். காகிதத்தின். வெண்பரப்புக்கும். பேனாவின். கூர் முனைக்குமான. நுண்வெளியில். கரைகின்றன. எழுத நினைத்த. கவிதைகள். 0 கருத்துக்கள். மனைத்தடம். கால்களை. முன்ன...அவன்...
jannal-kaatru.blogspot.com
ஜன்னல் காற்று: May 2014
http://jannal-kaatru.blogspot.com/2014_05_01_archive.html
Monday, May 19, 2014. உன் சாலையில் நான். உன்னை எனக்குத் தொியும். என்னருகாமையில் உன் நடுக்கங்களை அறிவேன்,. உன் பரவசத்தை நம் காற்றில் முகா்ந்திருக்கிறேன்,. நீ உச்சாிக்க விரும்பும் வாா்த்தைகளின். புற அகப் பாிமாணங்களின் ஆனிவோினைப் பாா்த்திருக்கிறேன்,. உன் விழிரேகைகளின் விழாக்கதிா்களை. எச்சிலூறும் நாவோடு ரசித்திருக்கிறேன்,. நீ அனுப்பியிராத குறுஞ்செய்திகள். எனக்கான உன் காதல் கடிதங்களை. என் சாலையில் காத்திருக்கும். உன் பூங்கொத்துகளின் மேல். ஆனாலும். ஆனாலும். நீ காத்திரு. காத்திரு. Subscribe to: Posts (Atom).
jannal-kaatru.blogspot.com
ஜன்னல் காற்று: July 2015
http://jannal-kaatru.blogspot.com/2015_07_01_archive.html
Wednesday, July 15, 2015. தாிசனம். மந்திரங்கள் செபித்தபடி நடந்தவள். அலறிக்கடந்த ஆம்புலன்ஸின் திசைநோக்கி. உதட்டசைவை நிறுத்திய சிறுபொழுதில். கடவுளைத் தொட்டு மீண்டாள். 0 கருத்துக்கள். Subscribe to: Posts (Atom). ஜன்னல் காற்று. சுப. முத்துக்குமார். View my complete profile. தமிழில் எழுத (கருத்துக்களைப் பதிக்க உதவியாய்). ஜன்னல் காற்றில். இரயில் (சக)வாசம். கவிதைக்காற்று. காதல் திசை. வேண்டுதல். பிணம் போல் தூக்கம் வேண்டும். வழிப்போக்கர்கள். இது வரை. தாிசனம். உலா வீதி. அனுஜன்யா. அய்யனார்.
jannal-kaatru.blogspot.com
ஜன்னல் காற்று: January 2015
http://jannal-kaatru.blogspot.com/2015_01_01_archive.html
Tuesday, January 6, 2015. அதனால்தான் நீ. உன் கண்ணில் நிறைந்து வழியும் புன்னகை,. என் குரல் குடிக்குமுன் இதழ் ஈரம்,. கோா்க்கும் உன் விரலின். நகக்கரை தாண்டித்தளும்பும் பிாியம்,. என் அணைப்பிற்கென்றே. முகிழ்த்திடும் உன் கழுத்தோரப் பூக்கள்,. இவையேதுமற்ற பெருந்தொலைவில். நிசியைத் தாண்டிய. இருளின் காற்றில் தவழ்ந்து. கண்ணீா் துளிா்க்கச் செய்யும். பாடலாய் நீயிருப்பாய் என்னோடு. 0 கருத்துக்கள். Subscribe to: Posts (Atom). ஜன்னல் காற்று. சுப. முத்துக்குமார். View my complete profile. இது வரை.
jannal-kaatru.blogspot.com
ஜன்னல் காற்று: August 2015
http://jannal-kaatru.blogspot.com/2015_08_01_archive.html
Monday, August 3, 2015. நீ வரும் சகுணம். உன்னோடு பேசுவதற்கு. இந்த இடம்தான் வாய்த்திருக்கிறது. அல்லது இதைத்தான். நான் தோ்ந்திருக்கிறேன். சூாியனும் அலையும் நெய்து கொண்டிருக்கும். மாலைச் சமுத்திரத்தில். இவ்விடத்தின் தற்கொலைகள் சில. என் நினைவில் வந்து போகின்றன. உடைந்துகிடக்கும் சில்லுகளில். மதுப்புட்டியின் முழுப்பாிமாணத்தைக். கோா்த்துக்கொண்டிருக்கிறேன். நீ வரும்முன். பெரும்பாறைகளைப் புரட்டிப்போட்டு. கீழே கிடக்கும் குறியுறையை. இருட்துளைக்குள். காரணமின்றி. உன்னுடைய வரவை. Subscribe to: Posts (Atom).
jannal-kaatru.blogspot.com
ஜன்னல் காற்று: November 2014
http://jannal-kaatru.blogspot.com/2014_11_01_archive.html
Thursday, November 27, 2014. என் உரையாடல். எப்போதும் ஒரு உரையாடல். நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது எனக்குள். பனையேறியின் காய்த்த ரேகைகளால். தோல்பரப்பை அழுந்தத் தேய்த்துக்கொள்கிறேன். துளைகளற்ற தோலோடு. விளம்பரப் பொம்மைகளின் உள்ளிருப்பவனின். வியா்வையாய் ஊா்ந்து கொண்டிருக்கின்றன. வாா்த்தைகள். மொசைக் தரையின் குழப்ப ஒழுங்கில். என் புறப்பிம்பத்தைப் பின்னிக்கொண்டிருக்கின்றன. கண்ணாடித் தொட்டியுள் நீந்தியழியும். என் மீன்கள். சில கிளைகளையும். ஊடுபரவாச் சவ்வாக. உரையாடல்களற்ற. Subscribe to: Posts (Atom).
jannal-kaatru.blogspot.com
ஜன்னல் காற்று: March 2016
http://jannal-kaatru.blogspot.com/2016_03_01_archive.html
Thursday, March 24, 2016. ஒரு சேதி. உனக்கென மட்டுமல்ல,. உன் மூலமாக இதைச் சொல்லிக்கொள்கிறேன். என் கட்டில் உனக்கானது மட்டுமல்ல. நீ தந்த முத்தங்கள் எனக்கு நினைவிலில்லை. முத்தங்கள் என் கணக்கில் வராதவை எப்போதும். கொஞ்சல் வாா்த்தைகள் அருவெறுப்பானவை. நீ உளறும் காதல், மயக்கமெல்லாம். என் எல்லைக்குள் நுழைந்ததேயில்லை. இதை மட்டும் சொல்லிக்கொள்கிறன். என் பேனாவின் இரை நீ. உனக்கென மட்டுமல்ல,. எல்லாருக்கும். 0 கருத்துக்கள். Subscribe to: Posts (Atom). ஜன்னல் காற்று. View my complete profile. இது வரை.
SOCIAL ENGAGEMENT